Connect with us

முதல் இடத்துக்கு போக முயற்சிக்கும் பெங்களூர்! 4-வது வெற்றியை பெறப் போராடும் ஹைதராபாத்!!

2021 ipl

செய்திகள்

முதல் இடத்துக்கு போக முயற்சிக்கும் பெங்களூர்! 4-வது வெற்றியை பெறப் போராடும் ஹைதராபாத்!!

முதல் இடத்துக்கு போக முயற்சிக்கும் பெங்களூர்! 4-வது வெற்றியை பெறப் போராடும் ஹைதராபாத்!!

இன்றைய தினம் விடுமுறை நாள் என்பதால் இரண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறும். அதன்படி இன்று இரவு 07:30 மணிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியோடு மோதுகிறது.

இந்தப் போட்டியானது மும்பை மைதானத்தில் நடைபெற உள்ளது. அதன்படி இந்த இரண்டு அணிகளின் நிலை பற்றிய விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி உள்ளது.

பெங்களூர் அணி, 7 போட்டிகளில் இரண்டு தோல்விகளை மட்டுமே சந்தித்து 10 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த பெங்களூர் அணியின் பேட்டிங் தரவரிசையில் அனைத்து அணிகளுக்கும் சவாலாக காணப்படுகிறது.

அதன்படி கேப்டன் ஃபேப் டு பிளேசிஸ், அவருக்குப்பின் களமிறங்கும் விராட் கோலி இடையில் களமிறங்கும்  மாக்ஸ்வெல், இறுதியாக முடித்து வைக்கும் தினேஷ் கார்த்திக் என பல ஜாம்பவான்கள் அடங்கிய டீம் ஆக காணப்படுகிறது.

பந்துவீச்சிலும் ஹேசல்வுட் மற்றும் ஹர்ஷல் பட்டேல், சிராஜ் உள்ளிட்டோர் காணப்படுகின்றனர். ஹைதராபாத் அணி தனது நான்காவது வெற்றிக்கு போராடிக் கொண்டு வருகிறது. ஆனால் ஹைதராபாத் அணியின் பேட்டிங் தரவரிசையில் அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை என்று கூறலாம்.

கேப்டன் கேன் வில்லியம்சன், ராகுல் திருப்பதி, நிக்கலஸ் பூரன் உள்ளிட்டோர் தங்களது திறமையை இன்னும் காட்டாமலேயே காணப்படுகின்றனர். இருப்பினும் புவனேஷ் குமார், நடராஜன், சுஜித் உள்ளிட்ட பவுலர்களை வைத்து ஹைதராபாத் அணி சமாளித்து வருவதாக தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top