பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வி! ப்ளே ஆப் செல்லும் தகுதியை இழந்ததா சென்னை?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

ஐபிஎல் 2022 தொடரின் 38வது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. இதில் அதிகபட்சமாக 59 பந்துகளில் ஷிகர் தவான் 88 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணியின் டிவைன் ப்ராவோ 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

பின்னர் 188 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி தொடக்கம் முதலே நிதனமாக விளையாடியது. ராபின் உத்தப்பா 1 ரன்னிலும், மிச்செல் சான்ட்னர் 9 ரன்களிலும், ஷிவம் துபே 8 ரன்களிலும், ருத்ராஜ் கெய்க்வாட் 30 ரன்களிலும் வெளியேறினர். ஆனால் அம்பதி ராயுடு அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் 78 ரன்களை குவித்தார். ஆனாலும் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. பஞ்சாப் அணி சார்பில் ககிசோ ரபாடா மற்றும் ரிஷி தவான் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர்.

இந்த தோல்வியின் மூலம் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை சென்னை அணி கிட்டத்தட்ட இழந்துள்ளது. சென்னை இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...