ஐபிஎல் 2022: ஃபைனல் மேட்ச் நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறும்;

நம் இந்தியாவில் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இது 15வது ஐபிஎல் போட்டி என்பதால் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

மேலும் இந்த ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் உள்ளன. அதிலும் குறிப்பாக ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் மும்பை, பூனே மைதானங்களில் மட்டுமே நடைபெற்றுக் கொண்டு வருகிறது. ஏனென்றால் covid காரணமாக இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெறும் மைதானம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ipl2022 தொடரின் இறுதிப்போட்டி குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.

இந்த இறுதிப் போட்டி காண்பதற்காக தற்போது முதலே ரசிகர்கள் ஆர்வத்தோடு டிக்கெட் புக் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு வருகின்றனர். இறுதிப் போட்டியானது மே 29-ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.