கண்ணுக்கு தெரியாத வீடு..! இருக்கு… ஆனால் இல்ல……

லண்டனில் கட்டப்பட்டுள்ள ஒரு கண்ணாடி வீடு கண்களுக்கு தெரியாத படி வடிவமைக்கப்பட்டுள்ளதால் அனைவரது  கவனத்தையும்  திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் கட்டட கலையில் உலக அளவில் தனித்துவமாக உள்ளது. தற்போது அதனை மீண்டும் மெய்ப்பிக்கும் வகையில் லண்டனில் ரிச்மாண்ட் பகுதியில் கண்ணாடி வீடு கட்டப்பட்டு உள்ளது.

முற்றிலும் கண்ணாடிகளை வைத்து கட்டப்பட்டுள்ள இந்த வீடு இருக்கும் இடம் தெரியாத படி வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த வீட்டிற்கு உள்ளே இருப்பவர்களை வெளியில் இருந்து பார்க்க முடியாது.

ஏனினும் வீட்டிற்கு வெளியே நடக்கும் அனைத்தையும் வீட்டிற்கு உள்ளே இருப்பவர்கள் பார்க்கும் வகையில் பிரத்தேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 2015 ஆண்டிற்கு முன்பு வரை சாதாரனமாக வீடாக இருந்த நிலையில் பின்பு கட்டட கலை அலெக்ஸ்ஸா என்பவர் இந்த வீட்டை கண்ணாடிகளை வைத்து மறு வடிவமைத்துள்ளார்.

இந்த கண்ணாடி வீட்டின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றனர். லண்டன் ரிச்மாண்ட் பகுதியில் உள்ள இந்த கண்ணாடி வீட்டிற்கு புதியதாக வரக்கூடியவர்கள் வீட்டிற்கு அருகில் இருந்தாலும் வீட்டை கண்டுபிடிக்க முடியாமல் குழம்பி போய் விடுவார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment