
தமிழகம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் சித்தா, ஆயுர்வேதா படிப்புகள் அறிமுகம்!!!
கொரோனா காலகட்டத்தில் மருந்து கண்டுபிடிக்காத நேரத்தில் துணிகரமாக பயன்படுத்தப்பட்டு வெற்றி கண்டது ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ முறைகள் தான். மேலும் பல இடங்களில் சித்த மருத்துவ முறைகள் மக்களிடம் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இவை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சற்று அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இதனால் அண்ணா பல்கலைக்கழகம் திடீரென்று சில பாடப்பிரிவுகளை அறிமுகம் செய்கிறது. அதன்படி பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா படிப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்கிறது.
ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளது. தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் இன்னும் ஓரிரு நாட்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மாணவர்கள் சித்தா மற்றும் ஆயுர்வேத படிப்புகளை அண்ணா பல்கலைக்கழகத்திலேயே படிக்கும் ஒரு வாய்ப்பு உருவாகி உள்ளது.
புதிய வரவுகளான சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட படிப்புகளையும் ஆன்லைனில் பயிற்றுவிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு எடுத்துள்ளது.
