டிசம்பர் 1 முதல்! 4 நகரங்களில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம்!!

இந்தியாவில் வருகின்ற டிச.1 முதல் சில்லறை பணப் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் 4 நகரங்களில் வெளியிட இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு மத்தியில் கிரிப்டோகரன்சி என அழைக்கப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது அதிகரித்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு ரிசர்வ் வங்கி சார்பில் கரன்சியை அறிமுக செய்துள்ளது. அதன் படி, நவம்பர் மாதத்தில் 9 வங்கிகளில் கரன்சியை அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில் டிச.1 முதல் சில்லறை பணப் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாய் டோக்கன் வடிவில் அறிமுகம் செய்ய இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

மேலும், மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களில் தொடங்கப்படும் என்றும் அதன் தேவைகளுக்கு ஏற்ப மற்ற நகரங்களில் தொடங்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.