வரும் நிதியாண்டில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம்! பாதுகாப்பு துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு!!
2022-2023 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தற்போது தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றுள் ரயில்வே, வேலைவாய்ப்பு, விவசாயம் போன்ற பல்வேறு துறைகளுக்கான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் டிஜிட்டல் இந்தியாவிற்கும் ஏற்றபடி பல்வேறு நவீன தொழில்நுட்பத்திற்கு திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த வரிசையில் இந்திய மதிப்பில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய பண மதிப்பு ரூபாய் மதிப்பீட்டில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இவற்றை வரும் நிதியாண்டில் ஆர்பிஐ மூலம் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
பாதுகாப்புத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறினார். நாட்டின் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு துறையின் ஆராய்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ராணுவத்திற்கான பட்ஜெட் மதிப்பில் 25 சதவீத நிதி பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி கழக ஒதுக்கீடு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
