விவோ நிறுவனத்தின் Vivo Y31s ஸ்டாண்டர்டு எடிஷன் அறிமுகம்

bdf328e3a02d5585df1ba73cb657ccd7

விவோ நிறுவனத்தின் Vivo Y31s ஸ்மார்ட்போனின் ஸ்டாண்டர்டு எடிஷன் மாடலானது தற்போது வெளியாகியுள்ளது. 

விவோ ஒய் 31 எஸ் ஸ்டாண்டர்ட் எடிஷனின் 6 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு வகையின் விலை – ரூ.19,100

வண்ணம்: இந்த ஸ்மார்ட்போன் லேக் லைட் ப்ளூ, டைட்டானியம் கிரே மற்றும் வைட் வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

டிஸ்பிளே: விவோ ஒய் 31 எஸ் ஸ்டாண்டர்ட் எடிஷன் 6.51 இன்ச் 720×1,600 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் மற்றும் வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது.

சிப்செட் வசதி: விவோ ஒய் 31 எஸ் ஸ்டாண்டர்ட் எடிஷன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

மெமரி அளவு: இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜ் கொண்டதாக உள்ளது.

கேமரா அமைப்பு: விவோ ஒய் 31 எஸ் ஸ்டாண்டர்ட் எடிஷன் 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், 8 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டதாக உள்ளது.

இணைப்பு ஆதரவு: விவோ ஒய் 31 எஸ் ஸ்டாண்டர்ட் எடிஷன் 5 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 ஆடியோ ஜாக் கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவு: 18W டூயல் எஞ்சின் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது.
 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment