இனிமேல் ஆவினில் கூட்டம் கலைகட்ட போகுது; அசத்தலான 5 பொருட்கள் அறிமுகம்!
அத்தியாவசிய பொருட்களில் முதன்மையான பொருளாக காணப்படுகிறது பால். ஊரடங்கு காலகட்டத்திலும் பால் விநியோகத்திற்கு எவ்வித தடையும் கிடையாது என்றும் காவல்துறை சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பால் விவசாயிகளின் நலனை காக்கும் வண்ணமாக ஆவின் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தின் சார்பில் பால் மட்டுமின்றி இனிப்பு வகைகளும் தயார் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் ஒவ்வொரு தெருக்களிலும் ஏராளமான ஆவின் பாலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மேலும் புதிதாக ஐந்து பொருட்கள் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி ஆவின் நிறுவனத்தின் 5 புதிய தயாரிப்புகளை நம் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி பிரீமியம் மில்க் கேக், பாயசம் மிக்ஸ், மாம்பழம் மற்றும் ஸ்டாபெர்ரி சுவையில் யோகர்ட் பானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பால் புரத நூடுல்ஸ், டெய்லி ஒயிட்னர் ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்தார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின். ஆவின் நிறுவனத்தில் இத்தகைய புதிய ஐந்து பொருட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆவின் பாலகங்களிலும் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
