தமிழகத்தில் முதல் தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் அறிமுகம் !

சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில் டாஸ்மாக் (தமிழ்நாடு ஸ்டேட் மார்கெட்டிங் கார்ப்பரேஷன்) சார்பில் தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரம் ஏடிஎம் போன்று செயல்படும் என்றும், மதுபானங்களை விநியோகிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இயந்திரம், பொதுமக்கள் தொடுதிரை மூலம் தேவையான மது வகைகளைத் தேர்வு செய்து, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் பணத்தைச் செலுத்தலாம் என வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஏற்கனவே அறிவித்திருந்த படி மாநிலத்தில் 500 டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்களை மூடுவதற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஏப்ரல் 22ஆம் தேதி மாநில அரசு தெரிவித்தது.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம்

ஏப்ரல் 24-ம் தேதி திருமண மண்டபங்களிலும் மதுபானம் வழங்கலாம் என அறிவித்து அதில் இருந்து பின்வாங்கி ஆளும் அரசு தனது முடிவை வாபஸ் பெற்று விளையாட்டு அரங்கம் தவிர மாநாட்டு மையங்கள் மற்றும் வணிக வளாகங்களில் மட்டும் மதுபானம் வழங்கப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.