புகுந்த வீட்டு பெண் தீபமேற்றும் தாத்பர்யம்

19aa5f4b0e73edc877a047daba8492be

திருமணமான பெண்கள் முதன் முதலில் ஒரு வீட்டுக்குள் நுழைந்த உடன் அந்த பெண்ணை விளக்கேற்ற சொல்லிதான் வழிபட சொல்கிறோம் இதன் தாத்பர்யம் என்னவென்றால்,

பழங்காலம் முதலே பெண்கள்தான் விளக்கேற்ற வேண்டும் என கூறப்படுவதுண்டு. திருமணமாகிப் போன பெண் முதன் முதலில் வீட்டுக்கு வந்தவுடன் விளக்கேற்றச் சொல்கிறோம். வெளிச்சத்தைக் கொண்டு வரும் அடிப்படை ஆதாரம் விளக்கு. இருளைப் போக்கும் பொருள். பெண் குடும்பத்தின் விளக்காக இருக்கிறாள். எனவே பெண்கள்தான் விளக்கேற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இன்னொரு காரணம், ஒரு பெண்ணுடைய சிக்கனக் குணம், கையாளும் தன்மை, பதற்றமற்ற நிலை, நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் முறையைக் கவனிக்கவும், கற்றுக் கொடுக்கவும்தான். குடும்பத்தில் என்றென்றும் ஒளி பிறக்கச் செய்கிற பொறுப்பு, கடமை, அவளிடம் உள்ளது என்பதைக் குறிக்கத்தான் விளக்கு ஏற்ற சொல்லப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.