மக்களே உஷார் !! மிரட்ட வருகிறது புதிய வகை வைரஸ்.. பீதியில் உலக நாடுகள்..
ஒமிக்ரானை மிஞ்சும் புதிய வகை வைரஸ்ஸை கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியிருப்பது மீண்டும் கொரோனா குறித்து அபாய ஒலியை எழுப்பியுள்ளது.
இதற்கு ஒரு முடிவு இல்லை என்ற அளவிற்கு தனது உருமாற்றத்தால் உலகை அலறவைக்கிறது கொரோனா. தனது ஜீரோ கொரோனா கெடிபிடியால் கொரோனாவையும் டெல்டாவையும் சமாளித்தது சீனா. குறிப்பாக தென்கொரியா நாடுகளிலும் கூட வேகமெடுத்த கொரோனாவால் ஆட்டம் கண்டனர்.
இதனிடையே சீனாவில் அங்கொன்றும் இங்கொன்றும் தென்பட்ட தொற்றின் எண்ணிக்கை கடந்த ஒரே மாதத்தில் 1 லட்சத்தினை கடக்க காரணமானது ஒமிக்ரான்.
அந்த வகையில் ஒமிக்ரான் பி.ஏ.2 வகை வைரஸ்ஸை சமாளிக்க முடியாமல் அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகள் திண்டாடி வருகின்றனர். அமெரிக்காவில் 3-ல் ஒருவரும், பிரிட்டனில் 13-ல் ஒருவரும் பி.ஏ.2 வகை வைரஸ்சால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஒமிக்ரான் மற்றும் பி.ஏ.2 திரிபாக தற்போது ‘XE’ வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மற்ற வைரஸ்களை விட 10 மடங்கு அதிகம் பரவக்கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உலக நாடுகள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
