Connect with us

செம்ம வைரல்..!! இணையத்தில் மாஸ்காட்டும் தனுஷின் மேகம் கருக்காதா பாடல்..!!!

dhanush maari 1595599935

பொழுதுபோக்கு

செம்ம வைரல்..!! இணையத்தில் மாஸ்காட்டும் தனுஷின் மேகம் கருக்காதா பாடல்..!!!

இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இதை தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ளார்.

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே பாடலானது கடந்த மாதம் ஜூலை 15-ம் தேதி வெளியானது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாரதிராஜா, ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த சூழலில் குறிப்பாக இணையத்தில் ஒரு சில பாடல்கள் மட்டுமே டிரெண்டாகி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அண்மையில் அனிருத் இசையமைப்பில் வெளியான அரபிக் குத்து பாடல் ஆனது பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது மட்டுமல்லாமல் இணையத்தில் இருபது கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

தற்போது தனுஷ் குரலில் வெளியான மேகம் கருக்காதா என்ற பாடல் இணையவாசிகள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாடல்களுக்கு பலர் ரிலீஸ் செய்து வருகின்றனர்.

அதோடு யூடியூபில் இப்பாடலை 7 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top