Connect with us

சர்வதேச யோகா தினம்: பிரதமர் மோடி மைசூர் அரண்மனையில் பங்கேற்பு!!

modi 1

செய்திகள்

சர்வதேச யோகா தினம்: பிரதமர் மோடி மைசூர் அரண்மனையில் பங்கேற்பு!!

சர்வதேச யோகா தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் யோகா செய்வது மட்டுமில்லாமல் யோகாவின் சிறப்பு அம்சங்களை எடுத்துக்கூறி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலம் மைசூர் அரண்மனை வளாகத்தில் நடைபெற்று வரும் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் பல ஆயிரம் மாணவ மாணவியர் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிகிறது.

அதே போல் சென்னையிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆளுநர் மாளிகையில் பங்கேற்று உள்ளதாக தெரிகிறது. இவர்களுடன் தமிழக ஆளுநர் பங்கேற்று இருப்பதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து திபெத் எல்லை வீரர்கள் லடாக் பகுதியில் சர்வதேச யோகா தின விழாவை முன்னிட்டு 17,000 அடி உயரத்தில், யோகா செய்து அசத்தியுள்ளனர்.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இன்று நாடு முழுவதும் யோகா தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top