சர்வதேச விமான சேவை தொடங்கும் தேதி அறிவிப்பு!

இந்தியாவிலிருந்து சர்வதேச நாடுகளுக்கு பயணிகள் விமான சேவை தொடங்கும் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து விமான பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டது என்பதும், ஒரு சில சிறப்பு விமானங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்தியா உள்பட பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து மீண்டும் சர்வதேச விமான சேவை இயங்கும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி சர்வதேச பயணிகள் விமான சேவை டிசம்பர் 15-ந் தேதி முதல் தொடங்க இருப்பதாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் புதிய வகை வைரஸ் தோன்றியுள்ள ஒரு சில நாடுகளுக்கு மட்டும் விமான போக்குவரத்து சேவை இருக்காது என்றே கருதப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment