தற்போது உலகில் உள்ள பல நாடுகளும் சர்வதேச விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. ஏனென்றால் ஒமைக்ரான் மற்றும் கொரோனா ஆகிய இரண்டு வைரஸ்களும் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் மீண்டும் வேகமாக பரவுகிறது.
அதிலும் குறிப்பாக இரண்டு முறை இந்திய அரசாங்கம் ஆபத்திற்குரிய நாடுகளின் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதனால் அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களிலேயே தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனால் ஒரு சில நாடுகளில் இருந்து சர்வதேச விமான சேவையை இந்திய அரசாங்கம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சர்வதேச விமான சரக்கு சேவைக்கு எவ்வித தடையும் இல்லை என்றும் இந்திய சிவில் விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் கூறியுள்ளது. இந்திய அரசு அனுமதிக்கும் நாடுகளிலிருந்து மட்டும் விமான சேவை நடைபெறும் என்று சிவில் விமானப் போக்குவரத்து கூறியுள்ளது.