2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பன்னாட்டு விமான சேவை: தயங்கும் நிறுவனங்கள் !! காரணம் தெரியுமா ?

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பன்னாட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. தற்போது கொரோனா பரவல் குறைந்து விட்டதால் மீண்டும் மார்ச் 27 ஆம் தேதி முதல் பன்னாட்டு விமான சேவை துவங்கும் என ஒன்றிய விமான சேவை அமைச்சகம் அறிவித்தது.

இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் இரண்டு ஆண்டுகளாக முழுமையாக செயல்படாமல் இருந்த பன்னாட்டு சேவை பிரிவு மீண்டும் விறுவிறுப்பாகி உள்ளது. அங்கு முடங்கிக்கிடந்த பிரிவுகள் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டு பயணிகள் புறப்பாடு மற்றும் வருகை காண ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

இதனிடையே சென்னையை பொருத்தவரையில் கொரோனாவிற்கு முந்தைய நிலையை அடைய இன்னும் 2, 3 மாதங்கள் ஆகும் என்கின்றனர் விமானப் பயணத்திற்கான டிராவல்ஸ் நிறுவனத்தினர். உக்ரைன் போர் முடிவுக்கு வராத நிலை, சீனா, தென் கொரியா போன்ற நாடுகளில் கொரோனா தொற்று ஆகியவை இதற்கு காரணம் என கூறுகின்றனர்.

இந்நிலையில் சிங்கப்பூர், இலங்கை போன்ற நிறுவனங்கள் பன்னாட்டு சேவை அளிக்க முன் வந்துள்ளனர். அதே நேரத்தில் எத்தியாட், கல்பியட், பிரிட்டிஸ், மலேசியா, தாய்லாந்து போன்ற நிறுவனங்கள் தங்கள் சேவையை சென்னையில் தொடங்குவதற்கு குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை என டிராவல் ஏஜெண்டுகள் கூறுகின்றனர்.

ஏர் இந்தியா விமான நிலையத்தை டாட்டா குழுமம் வாங்கிய பொழுது சுமார் 25 விமானங்களை புதுப்பிக்கும் பணிக்கு அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மற்ற விமானங்களின் பயணக்கட்டனம் கிடுகிடுவென உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment