இடைநிலை ஆசிரியர் போராட்டம் வாபஸ்!!

தமிழகத்தில் சமவேலை சம ஊதியம் என்பதை வலியுறுத்தி சென்னை பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 6 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் 2009-ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஆசிரியருக்கும், அதற்கு பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக இருந்து வந்தது.

டிசம்பரில் ரூ.1.49 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்: ஒன்றிய அரசு தகவல்!!

இதனிடையே தொடர்ந்து 6 நாட்களாக போராட்டம் நடைப்பெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் இறுதி முடிவெடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்து இருந்தார்.

தற்போது 6 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் வாபஸ் பெறுவதாக இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய இடைநிலை ஆசிரியர்கள் சங்கம்.

புத்தாண்டு ஸ்பெஷல்! 49 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி… அலைமோதிய கூட்டம்!!

எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக முடிவெடுக்க குழு அமைத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தங்களுடைய நன்றிகளை தெரிவித்து கொள்வதாக கூறி உள்ளனர். அதே போல் நாளை நடைப்பெற இருக்கும் எண்ணும், எழுத்தும் பயிற்சியில் கலந்து கொள்வதாக கூறியுள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.