Connect with us

இலங்கை தற்காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்க – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

Ranil

செய்திகள்

இலங்கை தற்காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்க – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

கடந்த சில மாதங்களாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் சூழலில் அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதனால் அந்நாட்டு பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் வன்முறையாக வெடித்துள்ளது. குறிப்பாக போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை அடித்து நொறுக்கினர்.

இதன் காரணமாக அச்சத்தில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பியோடியதாக கூறப்படுகிறது. குறிப்பாக இலங்கை அதிபர் மாலத்தீவுக்கு தப்பி ஓடியதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் அடுத்த அதிபர் யார் என்பது குறித்து இலங்கை மக்கள் மனதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த வகையில் தற்போது இலங்கை பிரதமராக இருக்கும் ரணில் விக்ரமசிங்க தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இத்தகைய அறிவிப்பை இலங்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அதோடு வரும் காலங்களில் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறையுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top