இரண்டு கோவில்களை இடிக்க இடைக்கால தடை!!: உயர்நீதிமன்றம் உத்தரவு;
தமிழகமெங்கும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அதிகமாக காணப்படுகிறது. இதனால் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டடங்கள், வீடுகள் என அனைத்தையும் உடனடியாக இடிக்க நடவடிக்கை எடுத்து கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து இரண்டு கோவில்கள் உள்ளதாக தெரிகிறது. இதனால் தமிழகத்தில் இரண்டு இடங்களில் இரண்டு கோவில்களை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவிற்கு தற்போது இடைக்கால தடை விதிக்கப் பட்டதாக தெரிகிறது. அதன்படி திருப்பூர்-உடுமலைப்பேட்டை 100 ஆண்டுகள் பழமையான கோவில்களை இடிக்க இடைக்கால தடை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.
நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இரண்டு கோயில்களை இடிக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கொண்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிராக கோபிநாதன், கிருஷ்ணசாமி என்பவர் தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
மனு தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசு தரப்புக்கு உத்தரவிட்டு இந்த விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.
