வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடையா?

fa85ee4262f6e8349c83d64be5d639ed

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர் 

தமிழக சட்டசபையில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்த மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது இந்த மசோதாவிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் அதற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்

இந்த வழக்கு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருப்பதால் இடைக்கால உத்தரவு தேவையில்லை என்று கூறிய நீதிபதிகள் வழக்கை செப்டம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்றைய தினமும் அதற்கு பின்னரும் ஒருசில நாட்கள் இறுதி விசாரணை நடைபெறும் என்றும் அதன் பின்னர் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் 

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டின் படி பள்ளி கல்லூரிகளில் ஒதுக்கப்பட்ட இடங்கள் மற்றும் பணி நியமனங்கள் செய்யப்படுவது இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment