Connect with us

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு தீவிர பயிற்சி!

தேர்தல்

தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு தீவிர பயிற்சி!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு தீவிர பயிற்சி!

பிப்ரவரி 19-ஆம் தேதி நம் தமிழகத்தில் ஒரே கட்டமாக உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் குறிப்பாக திமுக காங்கிரஸ் மற்றும் அதிமுக பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை அதி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு சென்னையில் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.

சென்னையில் மொத்தம் 24 இடங்களில் சுமார் 27 ஆயிரத்து 812 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியானது காலை 10 மணிக்கு தொடங்கியது. பயிற்சி வகுப்பு நண்பகல் 12:30 வரையும் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்தல் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு பிப்ரவரி மாதம் பத்தாம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top