Connect with us

தீவிர சிகிச்சை பிரிவில்.. காமெடி நடிகர் போண்டா மணி !!..

po 1

பொழுதுபோக்கு

தீவிர சிகிச்சை பிரிவில்.. காமெடி நடிகர் போண்டா மணி !!..

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் போண்டா மணி.பவுனு பவுனுதான் படத்தின் படத்தின் மூலம் அறிமுகமாகி, பல படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள போண்டா மணி, சுமார் 270 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.போண்டா மணி அவர்களுக்கு 58 வயதாகிறது

out

இலங்கை சேர்ந்த இவர் கேதீஸ்வரன் என்ற பெயரை போண்டா மணி என மாற்றினார். சுந்தரா டிராவல்ஸ், வின்னர், படிக்காதவன், மருதமலை, ஜில்லா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிகர்கள் வடிவேலு, விவேக், சந்தானம், சூரி, யோகி பாபு ஆகிய காமெடி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ளார். வடிவேலுவுடன், இவர் நடித்துள்ள பல காமெடி காட்சிகள் இன்று வரை பேசப்பட்டு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து வருகின்றன.

இவருக்கு 2003-ல் திருமணம் நடைபெற்றது. சாய் குமாரி, சாய் ராம் என இரு குழந்தைகள் உண்டு. சாய் கலைக்கூடம் என்ற பெயரில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

fa 1

கூடையில் என்ன பூ குஷ்பூ சொன்ன காலம் போயாச்சு !!.. அப்போ கண்ணாடி போட்டு இது யாரு ??..

இந்நிலையில் இதய பிரச்னை காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு நடிகர் போண்டா மணிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வந்துள்ளது. மேலும் நடிகர் போண்டா மணி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் திரை பிரபலங்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top