அதிபருக்கு எதிராக காலிமுகத்திடலில் வலுக்கும் போராட்டம் !!

இலங்கையில் கடந்த இரண்டு மாதங்களாக பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத நிலையில் அந்நாட்டு மக்கள் திண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக இலங்கையின் முக்கிய நகரமான கொழும்பில் நாளொன்றுக்கு 13 மணி நேர மின்வெட்டு செய்யப்படுவதால் மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளது.

இந்நிலையில் இலங்கை அதிபருக்கு எதிராக பதவி விலக கோரி அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அதிபர் மாளிகையின் முன்பு மேடையும் அமைக்க தொடங்கியுள்ளனர்.

இதனை அறிந்த காவல்துறையினர் அங்கு சென்று பேச்சு நடத்தி மேடையை அகற்ற வற்புறுத்தினர். இதனால் அப்பகுதியில் சற்று சலசலப்பு நிலவியது. இதனிடையே பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காவலர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

இருப்பினும் கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருப்பதால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment