முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடல் வழியாக தப்பிச் செல்வதை தடுக்க தீவிரம்!: காவல்துறை

சில நாட்களாக எதிர்க் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் இடங்களில் வருமான வரி சோதனை மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்றது. இதில் பல கணக்கில் காட்டப்படாத பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதோடு மட்டுமில்லாமல் வழக்கும் பதிவு செய்யப்பட்டன.

Rajendra balaji

இந்த நிலையில் கடந்த வாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இடங்களில் சோதனை நடைபெற்றது. அதோடு மட்டும் இல்லாமல் அவர் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடல் வழியாக தப்பிச் செல்வதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடல் வழியாக தப்பிச் செல்வதை தடுக்க காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதனால் கடலோரங்களில் கண்காணிப்பை அதிகரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியை 8 தனிப்படை தேடிவருகிறது. விமானம் மூலம் வெளிநாடு செல்வதை தடுக்க ஏற்கனவே காவல் துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment