
தமிழகம்
அதிரடி அறிவிப்பு; உளவுத்துறை ஐஜி மாற்றம்-தமிழக அரசு உத்தரவு!!
நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பின்பு அடுத்தடுத்து உயர் பதவியில் உள்ள அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதிலும் குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கலவரத்தின் காரணமாக அங்குள்ள கலெக்டரை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அதன்படி திருவல்லிக்கேணி காவல்துறை துணை ஆணையராக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்பியாக மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டு கூறியுள்ளது. மேலும் உளவுத்துறை ஐஜியாக ஆசியம்மாள் இடமாற்றம் செய்யப்பட்டு அமலாக்க பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் உளவுத்துறையின் ஐஜியாக செந்தில் வேலனை நியமித்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பூக்கடை காவல்துறை துணை ஆணையராக ஆல்பர்ட் ஜானை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் காவல் கண்காணிப்பாளராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
