“தமிழக காவல்துறையா? அல்லது அறிவாலயத்தை காக்கும் துறையா? – அண்ணாமலை!

கோவையில் நடைப்பெற்ற சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஜமேசா முபின் குறித்து தனிப்பிரிவு போலீஸ் கொடுத்த எச்சரிக்கைக்கான ஆவணங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 23ஆம் தேதி இரவு, நடந்த விபத்து சிலிண்டர் விபத்து இல்லை, இது ஒரு தீவிரவாத சதிச்செயல் என்றும் இதை மேற்கொண்ட நபருக்கு ISIS என்கிற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்தது என்பதை பதிவு செய்ததை காவல்துறை மறக்க முடியுமா? என குறிப்பிட்டுள்ளார்.

அதே போல் தமிழக முதல்வர் மவுனம் காப்பது அனைவரும் அறிந்ததே எனவும் தொடர்பே இல்லாத சாராய அமைச்சர் கோவையில் நடந்த தற்கொலை படை தாக்குதலை பற்றி சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியதற்கும், உள்துறைக்கும் என்ன சம்மந்தம்? என்ற கேள்வியெழுப்பியுள்ளார்.

தற்கொலைப்படை தாக்குதல் நடந்த அன்று தமிழக டிஜிபி கொடுத்த நேர்காணல் இது ஏதோ சாதாரண விபத்து என்பதை தெரிவித்தாகவும், தற்கொலைப்படை தாக்குதல் வழக்கின் போக்கை திசை திருப்பும் விதமாக காவல்துறை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக கவர்னர் இந்த குண்டுவெடிப்புக்கு காரணமானவர் என்பது போன்று சமூக வலைதளங்களில் பரப்பி வரும் திமுகவினர் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? எனவும் வழக்கின் போக்கை திசை திருப்ப முயற்சிகள் நடைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment