Connect with us

51 தொகுதியா? முதலில் உங்களை கூட்டணியிலேயே வைக்கவில்லை; அவமானப்படுத்திய பாஜக-ஐக்கிய ஜனதா தளம் தனித்துப் போட்டி!

janata dal

செய்திகள்

51 தொகுதியா? முதலில் உங்களை கூட்டணியிலேயே வைக்கவில்லை; அவமானப்படுத்திய பாஜக-ஐக்கிய ஜனதா தளம் தனித்துப் போட்டி!

51 தொகுதியா? முதலில் உங்களை கூட்டணியிலேயே வைக்கவில்லை; அவமானப்படுத்திய பாஜக-ஐக்கிய ஜனதா தளம் தனித்துப் போட்டி!

பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது உத்தர பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் தான். ஏனென்றால் அடுத்த மாதம் முதல் உத்தர பிரதேச  மாநிலம் மட்டும் இல்லாமல் இந்தியாவில் உள்ள ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் தற்போது பாஜகவின் ஆட்சி நடைபெறுகிறது. அதன்படி முதல்வராக உள்ளார் யோகி ஆதித்யநாத். இந்த நிலையில் நேற்றைய தினம் பாஜக சார்பில் உத்தரபிரதேச மாநிலத்தில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்த சூழ்நிலையில் பிரதேசத்தில் பாஜகவுக்கு பின்னடைவு அமைந்துள்ளது. ஏனென்றால் அடுத்தடுத்து பாஜகவின் எம்எல்ஏ, அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்த சூழ்நிலையில் உத்தர பிரதேசத்தில் பாஜக உடன் கூட்டணி இருந்த கட்சி ஒன்று தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா கூட்டணியில் பிளவு ஏற்பட்டதையடுத்து தனித்து போட்டியிடுவதாக ஐக்கிய ஜனதா தளம் அறிவித்துள்ளது. பீகாரிலும் ஒன்றிய அரசியலும் பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் பெற்றிருந்தாலும் உத்திரபிரதேசத்தில் பாஜக கூட்டணி இல்லை என்று அறிவித்துள்ளது.

உத்திரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 51 தொகுதிகளை ஒதுக்குமாறு கோரியிருந்தது ஐக்கிய ஜனதா தளம். பாஜக தலைமையிலேயே, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு இடமில்லை என்று அறிவித்துவிட்டது.

அப்னாதளம், நிர்மல் இந்தியன் ஷோஷித் ஹமரா ஆம் தளம் ஆகிய கட்சிகள் மட்டும் பாஜக கூட்டணியில் உள்ளதாக அறிவித்துள்ளது. பாஜகவால் அவமானப்படுத்தப்பட்ட ஐக்கிய ஜனதாதளம் உத்தரபிரதேசத்தில் தனித்துப் போட்டியிட அதிரடி முடிவு எடுத்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் முதல் பட்டியலை 18ஆம் தேதி வெளியிடுகிறது. உத்திரப்பிரதேசத்தில் செல்வாக்கு இல்லாத ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஏன் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் கேள்வி கேட்டதாக கூறினர்.

ஏற்கனவே பாஜகவில் இருந்து மூன்று அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் விலகியதால் பலவீனமடைந்துள்ளது அக்கட்சி. ஐக்கிய ஜனதாதளம் உத்தரதேசத்தில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதால் பாஜகவுக்கு பின்னடைவு நிகழ்கிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top