Connect with us

காலை சிற்றுண்டி திட்டம் தொடர்பான வழிமுறைகள் வெளியீடு!!

Capture 59

தமிழகம்

காலை சிற்றுண்டி திட்டம் தொடர்பான வழிமுறைகள் வெளியீடு!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறது. குறிப்பாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு இலவச திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அதன் ஒருபகுதியாக பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்துவது குறித்து வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி, இத்திட்டத்திற்கு பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் சுழற்சி முறையில் பார்வையிட வேண்டும் என கூறியுள்ளது.

அதே போல் உணவு பட்டியலின் அடிப்படையில் மாணவர்களுக்கு சுகாதாரமான உணவைப் போதுமான அளவிற்கு வழங்குதலை உறுதி செய்தல் வேண்டும் என கூறியுள்ளது. அதோடு சமையல் பாத்திரங்களை சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்தல் வேண்டும் என கூறியுள்ளது.

இதனை தொடர்ந்து மாணவர்களைச் சுத்தமான இடத்தில் அமர வைத்து பரிமாறுவதை உறுதி செய்தல் வேண்டும் என்றும் இதற்கு பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் உதவி செய்யலாம் என்றும் கூறியுள்ளது. மாணவர்களுக்கு வழங்கும் உணவுகளை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் சுழற்சி முறையில் உணவை சுவைத்து தரத்தை அறியலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் கைகளை சுத்தம் செய்வதை உறுதி செய்தல் வேண்டும் என்றும் சுகாதாரமான குடிநீரை வழங்குவதை உறுதி செய்தல் வேண்டும் என பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top