’24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை’…..தடையில்லா மின்சாரத்தை வழங்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்!!
நம் தமிழகத்தில் தற்போது வரை மின் தட்டுப்பாடு என்பது ஒன்று இல்லை. இருப்பினும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆங்காங்கே மின்தடை போன்றவைகள் ஏற்பட்டது. இது குறித்து சட்டப்பேரவையில் மின்வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்திருந்தார்.
இந்தநிலையில் தடையில்லா மின்சாரத்தை வழங்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அதன்படி மாநிலங்களில் மின் சேவை பாதிக்கப்படாத படி இருக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாளை முதல் மார்ச் 30ஆம் தேதி வரை தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் எதிரொலியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மருத்துவமனை, ரயில்வே உள்ளிட்ட முக்கியமான இடங்களில் மின் தட்டுப்பாடு இல்லாததை உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
மின்தட்டுப்பாடு குறித்த புகார்கள் வந்தால் அதை நிவர்த்தி செய்ய 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை இயக்க வேண்டும் என்றும் மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
