பிளாஸ்டிக் சர்ஜரியில் தென் கொரியா முக்கிய இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக சினிமா பிரபலங்கள் தங்களது அழகை மேலும் கூட்ட பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வார்கள். இந்த சூழலில் அவர்களுக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க போதிலும் அனைத்திலும் பங்கேற்க முடியாத சூழல் உருவாகிவிடும்.
இவற்றை சமாளிக்கும் பொருட்டு தென்கொரியாவில் அதிகமாக பெண் வடிவில் ரோபோக்கள் உருவாக்கப்பட்டு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இந்த ரோபோக்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு பலர் பேர் ரோபோக்களுக்கு நண்பர்களாகவும், பின்தொடர்பவர்களாக உள்ளன.
ஆனால் அவர்களை பின்பற்றும் நபர்களுக்கு இது ரோபோ என்று தெரியாத சூழலில் உருவாயுள்ளது. தென்கொரியாவை பொருத்தவரையில் ரோபோக்களை வைத்து அழகு சாதன வியாபாரங்கள் செய்து பலகோடி சம்பாதிப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதோடு இவர்களை சினிமாவில் நடிக்க வைப்பதால் பல ஆயிரம் கோடி வியாபாரம் கிடைக்குமென கூறியுள்ளனர். இதனால் சமூக ஊடகங்களில் வரும் பெண்களை ரோபோக்கள் என்று சரிவர தெரியாமல் பழக வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.