விவசாயியோடு ஒரு அதிகாரியை அனுப்பிய கலெக்டர்? உரக்கடையில் ஆய்வு-உடனடி சீல்!!
சில நாட்களுக்கு முன்பு உரக்கடைகளுக்கு சில முக்கிய அறிவிப்பு மற்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் கூடுதல் விலைக்கு உர பொருட்களை விற்பனை செய்தால் கடைகளுக்கு உரிமம் பறிக்கப்படும் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனையும் தாண்டி தமிழகத்தில் உள்ள பல இடங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் திடீரென்று அதிகாரிகள் பார்வையிட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுத்து கொண்டு வருகின்றனர்.
அந்த படி இன்று விழுப்புரத்தில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்ற ஒரு கடைக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிக விலைக்கு உரங்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது.
விவசாயி உடன் ஒரு அதிகாரியை அனுப்பி ஒரு மூட்டை உரம் வாங்க மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டிருந்தார். விழுப்புரம் ஒழுங்குமுறை கூடம் அருகே ஓர் உர கடையை ஆய்வு செய்தபோது மூட்டைக்கு ரூபாய் 125 கூடுதல் விலைக்கு விற்றது அம்பலமானது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்த உரம் கடைக்கு சீல் வைத்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
