மீண்டும் தொடங்கியது ஐடி ரெய்டு! சென்னை சூப்பர் சரவணா ஸ்டோரில் ஆய்வு;

ஒரு சில வாரங்களுக்கு முன்பு நம் தமிழகத்தில் தொடர்ந்து வருமான வரி சோதனை நடைபெற்று வந்தது. இது முதலில் எதிர்க்கட்சி தொடங்கி பின்னர் அரசு அலுவலங்கள் அனைத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்றது.

வருமான  வரி சோதனை

இதில் ஏராளமான காசுகள், நகைகள் போன்றவைகளை வருமானவரித் துறையினர் கைப்பற்றினர். அதோடு கணக்கில் காட்டாத சொத்துக்களை சேர்த்து வைத்தவர்கள் மீது வழக்கையும் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் இந்த ஐடி ரெய்டு சில நாட்களாக காணப்படவில்லை என்றாலும் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. அதன்படி சூப்பர் சரவணா ஸ்டோரில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை புரசைவாக்கம் ,தியாகராஜ நகரில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் கடைகள், அலுவலகங்களில் வருமான வரி சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.போரூர், குரோம்பேட்டையில் உள்ள கடைகளிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள முக்கிய பணக்காரர்கள் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ஸ்டோர் உரிமையாளரும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment