பல இடங்களில் பண மோசடி நடைபெறுகிறது. பெரும்பாலான பணமோசடியானது வேலை வாங்கி தருவதாக கூறி நடைபெறும் ஏமாற்று வேலையாகும். இதில் அவ்வப்போது பலரும் கைது செய்யப்படுகின்றனர். இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலை வாங்கி தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சகோதரி மகன்கள் இருவரிடமும் விடிய விடிய போலீஸ் விசாரணை புரிகிறது.
வேலை வாங்கி தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக உள்ளார். ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார், ரமணன் ஆகியோரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர் உட்பட 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ராஜேந்திர பாலாஜி கைது செய்ய 3 தனிப்படை அமைக்கப் பட்ட நிலையில் மேலும் மூன்று படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.