நம் நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் இரண்டுமே அதிதீவிர வேகத்தில் பரவிக் கொண்டு வருகிறது. இதன் விளைவாக பல நேரடி முறைகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகின்றன. பல நிறுவனங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும் படியும் கூறிக்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இனி உயர்நீதிமன்றத்தில் காணொலி மூலம் மட்டுமே விசாரணை நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகள் இனி காணொலி மூலம் மட்டுமே விசாரிக்கப்படும் என்று பதிவாளர் கூறியுள்ளார்.
இன்று முதல் விசாரணை நேரடியாக மட்டும் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒமைக்ரான் வேகமாக பரவி வருவதால் நேரடி விசாரணை நடைபெறும் என்று அறிவிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்குகள் தாக்கல், உத்தரவு நகல் கோரி விண்ணப்பங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என்றும் கூறப்படுகிறது. தவிர்க்க முடியாத நிலையில் குறிப்பிட்ட கவுண்டர்கள், விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.