மக்களே உஷார் !!லோன் ஆப் மூலம் நூதன மோசடி.. எச்சரிக்கும் சைபர் கிரைம்..

ஆன்லைன் ஆப் மூலமாக கடன் வாங்கிய பெண்ணை குறுஞ்செய்தி மூலமாக வாட்ஸ்சப்பில் புகைப்படங்களை அனுப்பி அவதூறாக பேசிய இரண்டு பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை வீரியம் பாளையம் பகுதியை சேர்ந்த சுவாதி என்ற பெண் மொபைல் போன் மூலமாக லோன் ஆப்பில்  1 லட்சம் ரூபாய் கடன் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். ஆனால் 57 ரூபாய் மட்டும் அவருடைய வங்கி கணக்கிற்கு வந்த நிலையில் வட்டியுடன் சேர்த்து 77 ஆயிரம் ரூபாய் திருப்பி செலுத்தி உள்ளார்.

ஆனால் மேலும் வட்டி செலுத்த வேண்டும் என்றும் தாமதித்தால் வட்டிக்கு வட்டி செலுத்த வேண்டும் என்று 2 பெண்கள் உட்பட 4 பேர் தொலை பேசியில் சுவாதியை மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில் சுவாதியில் செல்போனில் பதிவு செய்யப்பட்டுள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நம்பர்களுக்கு அவரை பற்றி அவதூறாக தகவல்களை அனுப்பியுள்ளனர். வாங்கிய கடன் செலுத்தாதவர்கள் மோசடி நபர்கள் என தொலைபேசி குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்சப்பில் சுவாதியின் புகைப்படங்களை அனுப்பி அவதூறு பரப்பியுள்ளனர்.

இது குறித்து கோவை சைபர்கிரைம் காவல்துறையில் அவர் புகார் கொடுத்த நிலையில் அந்த போன் நம்பர் பெங்களூரை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்திற்கு அனுப்பி பெங்களூர்  மத்திய சிறையில் அடைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment