திருமண அழைப்பிதழில் புதுமை செய்த பறவை காதலர்…. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க……

ஒரு திருமண நிகழ்ச்சி என்றால் சொந்தம் பந்தம் நண்பர்கள் என அனைவரையும் திருமண அழைப்பிதழ் வைத்து தான் அழைப்போம். ஆனால் அந்த திருமண அழைப்பிதழ் அதன் பிறகு என்ன ஆகும். திருமண முடிந்த கையோடு அந்த அழைப்பிதழை தூக்கி எறிந்து விடுவார்கள். இது வழக்கமா நடக்கிற ஒரு விஷயம் தான்.

திருமண அழைப்பிதழ்

ஆனால் தன் பிள்ளைகளின் திருமண அழைப்பிதழுக்கு இந்த நிலை வரக்கூடாது என நினைத்த தந்தை ஒருவர் திருமண அழைப்பிதழ் அனைவருக்கும் பயன்படும் விதமாக புதுமையான வகையில் அழைப்பிதழை வடிவமைத்துள்ளார். அப்படி என்ன செய்துள்ளார் என்று தானே கேட்கிறீர்கள். வாங்க விரிவாக பார்க்கலாம்.

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தை சேர்ந்த சிவபாய் ரவ்ஜிபாய் கோஹில் என்பவர் தனது மகன் மற்றும் மகள் ஆகிய இருவருக்கும் ஒரே சமயத்தில் திருமணம் நடத்த முடிவு செய்தார். அதேசமயம் தனது பிள்ளைகளின் திருமணம் அனைவராலும் நினைவுகூர வேண்டும் என நினைத்த கோஹில் திருமண அழைப்பிதழ் குப்பையில் வீசப்படாமல் பயனுள்ள வகையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்.

ஒரு நீண்ட யோசனைக்கு பிறகு சிட்டு குருவி கூடு வடிவில் அழைப்பிதழை வடிவமைக்க முடிவு செய்தார். கோஹில் பறவைகள் மீது பிரியம் கொண்டவர். அதுமட்டும் அல்லாமல் அவரது வீட்டில் பறவை கூடுகளை அமைத்து பராமரித்து வருகிறார். அதனால் தான் கோஹில் இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து கூறிய கோஹில், ”திருமணம் முடிந்ததும் அழைப்பிதழ்கள் குப்பையில் தூக்கி எறியப்படுவதற்கு பதிலாக, பயனுள்ள வகையில் கூடுகளாக மாறும் என்று எதிர்பார்க்கிறோம். சிலர் தங்கள் வீடுகளில் பறவை கூடுகள் வைத்திருக்கிறார்கள். எங்கள் பிள்ளைகளின் திருமண அழைப்பிதழ் வடிவில் வழங்கும் கூடுகள் என்றென்றும் நினைவில் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என கூறியுள்ளார்.

கோஹிலின் யோசனைப்படி திருமண அழைப்பிதழும் காலத்திற்கு அழியாமல் இருக்கும். அதேபோல் அழிந்து வரும் பறவை இனமான சிட்டுக்குருவியும் இதன் மூலம் பாதுகாக்கப்படும். மனுஷன் எந்த அளவுக்கு பறவைகள் மீது பாசம் வைத்திருந்தால் இப்படி யோசித்திருப்பார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment