தகவல் தொழில்நுட்பம் தான் இன்று உலகத்தை சுழல வைக்கிறது; முதல்வர் உரை!

தமிழகத்தில் முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின் தினந்தோறும் பல்வேறு அறிவிப்புகளை கூறிக் கொண்டு வருகிறார். அதோடு காணொலிக் காட்சி மூலமாக பல்வேறு கட்டடங்களை திறந்து வருகிறார்.

ஸ்டாலின்

ஒரு சிலவற்றை நேரடியாக சென்று திறந்து வைக்கிறார். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் கனெக்ட் கருத்தரங்கை தொடங்கி வைத்த பின்னர் முதலமைச்சர்  ஸ்டாலின் உரையாற்றினார்.

தகவல் தொழில்நுட்பத் துறையை உருவாக்கியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். தகவல் தொழில்நுட்பம் தான் இன்று காலத்தை சுழல வைத்துக் கொண்டு இருக்கிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

வளர்ச்சி, வேலைவாய்ப்பு அதிகரிப்பதற்காக இந்த மாநாடு அமைய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இளைஞர்களுக்கு கூடுதலான திறன் பயிற்சி கொடுத்து நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர்  ஸ்டாலின் கூறினார்.

அதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்கள் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதனை பின்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment