வலிமை படத்திற்காக அஜித் போட்ட கண்டிஷன்…. வெளியான தகவல்….!

அஜித் ரசிகர்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக காத்திருந்த காத்திருப்பிற்கு தற்போது பலன் கிடைக்க உள்ளது. ஆம் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது வெளியாக உள்ளது. படம் வெளியாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

வலிமை

இயக்குனர் வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நேர்க்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக அஜித் வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் வலிமை. இப்படம் எப்போது வெளியாகும் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

நாங்க வேற மாதிரி

முன்னதாக படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் டிரைலர் படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. இந்நிலையில் வலிமை படத்திற்காக இயக்குனர் வினோத்திற்கு நடிகர் அஜித் சில கண்டிஷன்கள் போட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி வலிமை படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே வினோத்திடம் அஜித் சில கண்டிஷன்களை கூறியுள்ளாராம். அதன் பின்னரே படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அதாவது போலீசாரை இழிவுபடுத்துவது குறித்த காட்சிகளோ, அல்லது தனி நபரையோ அரசியல்வாதிகளையோ, அரசியல் சம்பந்தப்பட்ட இழிவான காட்சிகளையோ வைக்கக் கூடாது என்பது தான் அந்த கண்டிஷனாம்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்களுக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. அதனால் தனது சினிமா வாழ்க்கையை கெடுக்கும் வகையிலோ அல்லது படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் வகையிலோ காட்சிகள் இருக்கக்கூடாது என்பதற்காக அஜித் இதுபோன்ற கண்டிஷன்களை போட்டாராம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment