இரட்டை குழந்தை விவகாரம்.. விதிமீறல் உறுதி என தகவல்!

தென்னிந்திய சினிமாவில் கடந்த 7 ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்தவர்கள் நடிகை நயந்தாரா- விக்னேஷ் சிவன். இவர்களுக்கு கடந்த மாதம் ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர்.

இதற்கிடையில் திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில், அவர்களுக்கு இரட்டை ஆண்குழந்தை பிறந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வாடகைத்தாய் குறித்து விசாரணை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

குறிப்பாக இதுவரையில் சுகாதாரத்துறை மேற்கொண்ட விசாரணையில் மருத்துவ மனை நிர்வாகம் விதிகளை மீறியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது 3 பேர் சேர்ந்த குழுவினர் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே இவர்களுக்கு திருமணமாகாத நிலையில் வாடகைத்தாய் சிகிச்சை வழங்கப்பட்டதா என்பது குறித்து இன்றைய தினத்திலும் மருத்துவ மனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்த இருப்பதாக தெரிகிறது.

மேலும், மருத்துவ மனை நிர்வாகம் அளித்திரும் விளக்கம் திருப்திகரமாக இல்லையெனில் சம்மந்தப்பட்ட நிர்வாகத்திடம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஓரிரு நாட்களில் அறிக்கை வெளியிடப்போவதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment