Connect with us

தீயாய் பரவும் ஃப்ளூ காய்ச்சல்; எழும்பூர் மருத்துவமனையில் நிரம்பிய படுக்கைகள்!

children hospital

தமிழகம்

தீயாய் பரவும் ஃப்ளூ காய்ச்சல்; எழும்பூர் மருத்துவமனையில் நிரம்பிய படுக்கைகள்!

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மொத்தம் 300 படுக்கைகள் காய்ச்சல் வார்டில் உள்ள அனைத்து படுக்கைகளும் நிரம்பும் அளவுக்கு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மழை வெயில் என மாறுபட்ட பருவமழை காரணமாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை எழும்பூர் மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மொத்தம் 300 படுக்கைகள் உள்ள காய்ச்சல் வார்டில், முழுவதும் நிரம்பியதால் கூடுதல் படுக்கைகள் அமைக்கப்பட்டு அங்கு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஃப்ளு காய்ச்சல் அதிகமாக இருப்பதால் காய்ச்சல் வார்டுகள் நிரம்பியதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தற்பொழுது மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் மீண்டும் ஃப்ளு காய்ச்சல் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.. இது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றோம் என்று எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை முதல்வர் எழிலரசி தெரிவித்துள்ளார். காலநிலை மாறுபாடினால் எப்பொழுதும் வரும் காய்ச்சல்தான் பயப்படுவதற்கு எதுவும் இல்லை என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top