இந்தியாவில் கொரோனா: பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர், தடுப்பூசி செலுத்தியவர்களின் நிலவரம்!

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்றைய தினம் தான் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகக்குறைவாக இருந்தது. இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9283 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா

இந்தியாவில் 24 மணி நேரத்தில் இந்த கொரோனா பாதிக்கப்பட்ட 437 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனா உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 66 ஆயிரத்து 554 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை பெற்றவர்களில் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 483 ஆக உள்ளது. இந்தியாவில் இதுவரை 3 கோடியே 39 லட்சத்து 57 ஆயிரத்து 698 பேர் கொரோனாலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

குறிப்பாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,949 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து இல்லம் திரும்பினர். நேற்றைய தினம் மட்டும் 76 லட்சத்து 58 ஆயிரத்து 203 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 118 கோடியே 44 லட்சத்து 23 ஆயிரத்து 573 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment