” இரண்டாவது பிரசவத்திலும் குழந்தை இறப்பு!” மருத்துவர்களின் அலட்சியமா காரணம்?

தற்போது தமிழகத்தில் பல மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகள் அதிகரித்துக் காணப்பட்டுள்ளது. மேலும் பல மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் தரமும் தனியார் மருத்துவமனையை விஞ்சும் அளவிற்கு உயர்த்தப்பட்டு காணப்படுகிறது.அரசு மருத்துவமனை

இதனால் மக்களுக்கு பல அரசு மருத்துவமனைகள் மீது நம்பிக்கை வந்துள்ளது. ஆனால் பல இடங்களில் அரசு மருத்துவமனைகளில் அலட்சியம் அதிகமாகக் காணப்படுகிறது.

“பரத்தின் அபார சிக்சர்”! ஒரு நிமிடம் பதறிய “சிஎஸ்கே”!

இந்த அச்சத்தின் விளைவாக பல உயிரிழப்புகள் நிகழ்கின்றன. அதன் வரிசையில் தற்போது பிரசவத்திற்கு வந்த தாய், மருத்துவர்கள் வராததால் குழந்தை இறந்ததாக கூறப்படுகிறது.

அரியலூர் அரசு மருத்துவமனைஇச்சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. அதன்படி அரியலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் செவிலியரின் இல்லாததால் குழந்தை இறந்து விட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குழந்தை மேலும் குன்னத்தைச் சேர்ந்த மணிமேகலைக்கு வலி ஏற்பட்டபோது சிகிச்சைக்கு செவிலியர் மற்றும் மருத்துவர் வரவில்லை என்று புகார். மேலும் இந்த மணிமேகலைக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இறந்த நிலையில் தற்போது இரண்டாவதாக பிறந்த குழந்தையும் இறந்துள்ளது.

பெரும் சோகத்தை அந்த குடும்பத்தில் உருவாக்கியுள்ளதுமருத்துவர் மற்றும் செவிலியரின் அலட்சியத்தால் தற்பொழுது ஒரு சிசு இறந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment