இந்தோனேசியா: கால்பந்தாட்ட கலவரத்தில் 127 பேர் பலி!!

இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவாவில் கால்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட கலவரத்தில் 127 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தோனேஷியாவில் கால்பந்து விளையாட்டில் தங்களுடைய அணி தோல்வியடைந்தால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் வீரர்களை தாக்க முயன்றுள்ளனர்.

அப்போது மைதானத்திற்குள் எதிர் அணி ரசிகர்கள் நுழைந்தால் இரு தரப்பினருக்கிடையே வன்முறை வெடித்தது. அதேசமயம் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசியதால் கலவரமானது விஸ்வரூபம் எடுத்தது.

இதில் 2 காவலர்கள் உட்பட 34 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதே போல் 88 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும், 180- மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றுவருவதாக கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.