Connect with us

தொடர்ந்து தள்ளிப்போகும் மறைமுக தேர்தல்; தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

election postponed

Tamil Nadu

தொடர்ந்து தள்ளிப்போகும் மறைமுக தேர்தல்; தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

தொடர்ந்து தள்ளிப்போகும் மறைமுக தேர்தல்; தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

இன்று காலை முதலே தமிழகத்தில் பரபரப்பான சூழலில் நிலவிக் கொண்டு வருகிறது. அதன்படி இன்று காலை முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது.

முன்னதாக மேயர் மற்றும் நகர்மன்ற தலைவர்க்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இருப்பினும் ஒரு சில இடங்களில் மறைமுக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தப்படி மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி தலைவர் தேர்தல் பதவிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் 27 கவுன்சிலர்களை உள்ளடக்கிய திருமங்கலம் நகராட்சியில் மறைமுக தேர்தலில் 13 கவுன்சிலர்கள் மட்டுமே வந்ததால் தேர்தல் அதிகாரி இத்தகைய நடவடிக்கை எடுத்தார்.

அதேபோல் தேவகோட்டை நகராட்சியில் மறைமுக தேர்தல் நடத்தப்படவில்லை. ஏனென்றால் தேர்தல் அதிகாரி மறைமுக தேர்தலில் வராததால் அங்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சியில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். இரு தரப்பு ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வால்பாறை நகராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கன்னியாகுமரி மயிலாடி பேரூராட்சியில் மறைமுக தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போதிய உறுப்பினர்கள் வராததால் மயிலாடி பேரூராட்சியில் மறைமுக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top