விறுவிறுவென்று நடக்கும் மறைமுக தேர்தல்….! வெற்றி மகுடம் சூட போவது யார்?
தமிழகத்தின் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் தனது கூட்டணிக் கட்சிகளுக்கு பதவி ஒதுக்கீட்டை அறிவித்திருந்தது. அதிலும் குறிப்பாக கூட்டணி கட்சிகளுக்கு துணை மேயர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மொத்தமுள்ள இருபத்தி ஒரு மாநகராட்சியில் கும்பகோணம் மாநகராட்சி மட்டும் கூட்டணி கட்சிக்கு காங்கிரஸ் ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் உள்ள மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர், நகர்மன்றத் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
இந்த மறைமுக தேர்தல் மிகவும் காரசாரமாக நடைபெற்று வருவது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குளச்சல் நகராட்சியில் போட்டி வேட்பாளர் எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தோல்வி அடைந்தது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அதன்படி குமரி மாவட்டம் குளச்சல் நகராட்சித் தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார் .திமுக தலைமை ஜான்சன் சார்லர்சை நேற்று அறிவித்தது. திமுக போட்டி வேட்பாளர் நசீர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
