9 மாவட்டத்தில் மறைமுக தேர்தல்!! தலைவர்,துணைத் தலைவர் தேர்வு!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதன் வரிசையில் தற்போது 9 மாவட்டங்களில் மறைமுக தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த மறைமுக தேர்தலில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மாநிலத் தேர்தல் ஆணையம்

அதன்படி திருப்பூர் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராக திமுகவை சேர்ந்த சூரியகுமார் தேர்வாகியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத் தலைவராக திமுகவைச் சேர்ந்த அஞ்சலட்சி துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவராக திமுகவை சேர்ந்த தமிழேந்தி ஏழுமலை தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவராக திமுகவை சேர்ந்த சதீஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த நிர்மலா சௌந்தர் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி ஒன்றியம் செட்டிமாங்குறிச்சி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த சித்தையன் தேர்வு செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்ட உறுப்பினர்கள் குழு தலைவராக திமுகவைச் சேர்ந்த செம்பருத்தி துர்கேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டத்திலுள்ள மானூர் ஊராட்சி ஒன்றியத் தலைவராக 22 வயது இளம் பொறியியல் பட்டதாரி ஸ்ரீலேகா போட்டியின்றி தேர்வாகியுள்ளார். அதே நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத் தலைவராக சேவியர் செல்வராஜா தேர்வு கப்பட்டு பதவி ஏற்றுக் கொண்டார். நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஒன்றியத் தலைவராக திமுகவைச் சேர்ந்த சவுமியா போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் ஒன்றிய குழு தலைவராக முன்னாள் எம்எல்ஏ இதயவர்மன் ஒருமனதாக தேர்வு ஆக்கப்பட்டார். செங்கல்பட்டு அச்சிறுப்பாக்கம் ஒன்றியத் தலைவராக ஒரத்திகண்ணன் ஒருமனதாக தேர்வு ஆகியுள்ளார்.

காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழுத் தலைவராக திமுகவை சேர்ந்த உதயா கருணாகரன் தேர்வு செய்யப்பட்டார். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவைச் சேர்ந்த வேல்முருகன் போட்டியின்றி தேர்வாகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை ஒன்றியம் கல்லாவி ஊராட்சியில் துணைத் தலைவர் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த கீதா கோடீஸ்வரன் தேர்வாகியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment