News
இந்தியா-அமெரிக்கா கூட்டாக “தாலிபான்களுக்கு” எச்சரிக்கை!!
சில நாட்களுக்கு முன்பு நம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா பயணம் மேற்கொண்டிருந்தார். மேலும் அவர் அமெரிக்க அதிபருடன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்தியா மற்றும் அமெரிக்கா கூட்டாக தாலிபான்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.ஏனென்றால் சில நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கைப்பற்றினர். இதனால் ஆப்கானிஸ்தானில் தொடர் பயங்கரவாதம் நிகழ்ந்து வருகின்ற நிலையில் தற்போது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பிற நாடுகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் மீண்டும் மாறி விடக்கூடாது என்று கூறியது. பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் சந்திப்பிற்கு பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் மூலம் தாலிபான்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.பெண்கள், சிறார்கள், சிறுபான்மையினரின் மனித உரிமைகளை மதிக்க வேண்டும் என்றும் இந்திய ,அமெரிக்க கூட்டு அறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும் ஆப்கானில் இருந்து வெளியேற விரும்பும் உள் நாட்டவர், வெளிநாட்டவர்களை தடுக்கக் கூடாது என்றும் கூட்டறிக்கையில் வலியுறுத்தப்படுகிறது.
மேலும் சில நாட்களாகவே ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து வன்முறைகள் வந்த நிலையில் தற்போது தாலிபான்களுக்கு எதிராக இத்தகைய கூட்டறிக்கை வெளியானது முக்கியமாக காணப்படுகிறது.
