நாட்டின் முதல் பெண் போர் விமானிக்கு கமல்ஹாசன் வாழ்த்து

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானமான ‘மிக்-21 பைசன்’ என்ற விமானத்தை தனியாக இயக்கும் முதல் பெண் என்ற பெருமையை மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த அவனி சதுர்வேதி என்ற பெண் விமானி பெற்றுள்ளார். இவருக்கு ராணுவ உயரதிகாரிகளும், பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் அவனி சதுர்வேதிக்கு தங்களது டுவிட்டரில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் அரசியல் களத்தில் குதித்த கமல்ஹாசனும் தனது டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

சுதந்திரமடைந்து 70ஆண்டுகள் ஆன பிறகே முதல் பெண் போர் விமானி உருவாகியிருக்கிறார். அவரை போல் இன்னும் பல பெண்கள் பலதுறைகளில் வரவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print