
News
இந்தியாவில் முதல் Sologamy திருமணம்: தாலி கட்டிக் கொண்ட ஷமா பிந்து !!
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதான ஷமா பிந்து. இவர் திருமண வாழ்க்கையில் விருப்பம் இல்லாமல் தன்க்கு தானே திருமணம் செய்துகொள்ளப்போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு திருமணமும் செய்துகொண்டார்.
இந்நிலையில் இவர் வெப்சீரியஸ்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்தே திருமணத்தில் விருப்பம் இல்லாத பிந்துவுக்கு தன்னை மணமகளாக பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாக தெரிகிறது. இதனிடையே கல்யாணம் முக்கியம் ஆனால் மணமகன் வேண்டாம் என தெளிவாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை தன்னுடைய பெற்றோர்களிடம் கூறியபோது அவர்களும் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. உறவினர்களை அழைத்து மண்டபம் புக் செய்த பிந்து மணமகளாக தன்னை அலங்கரித்த தோடு தனக்குத்தானே குங்குமமும் வைத்துக் தன்னையே திருமணம் செய்துக்கொண்டார்.
ஒருவர் தன்னையே நேசிப்பது மட்டும் தான் நல்லது என கூறியிருக்கும் பிந்து இரண்டு வாரம் கோவாவிற்கு ஹனிமூன் செல்லவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், எனது விருப்பப்படியே திருமணம் முடிந்ததில் மகிழ்ச்சி, மற்ற பெண்களைப் போல திருமணத்திற்கு பின் நான் வேறு வீட்டிற்கு செல்ல வேண்டியதில்லை என கூறியிருக்கும் பிந்துவின் திருமணத்திற்கு சோசியல் மீடியாவில் பலர் எதிர்ப்பு தெரிவித்தும், பலர் இந்த துணிச்சலுக்கு ஆதரவு தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.
